5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் போதை பொருளுக்கு அடிமை

நாட்டினுள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்து 5 லட்சம் பேரில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்திற்காக அதிகளவான பணப்பரிமாற்றம் தொலைபேசியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஜெனிலியா

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 34 லட்சத்தைக் கடந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் கிருபையால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு…

தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்தார். எஸ்.நந்தகோபால், பி.மதன், சி.விஜயகுமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், ஜி.டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகிய 12 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் பணி முழுமையாகவும், திருப்திகரமாகவும் செய்து முடிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விஜயகுமார் கூறியிருக்கிறார்.

பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) உயிரிழந்தார்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சட்விக் போஸ்மேன், 43 வயதாகும் சட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணமடைந்துவிட்டதாக அவரது பிரதிநிதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் போது தான் உயிர் பிரிந்தது. அவர் அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். சட்விக் போஸ்மேன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அவர் எப்போதும் பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.