05.01.2020 இன்றைய முக்கிய தமிழ் சினிமா செய்திகள் காலை

டைரக்டர் சீனுராமசாமியின் 2 படங்களும் ரிலீஸ் ஆகாதது ஏன்? தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லும் டைரக்டர்கள் பட்டியலில், புதுசாக இடம் பிடித்து இருப்பவர், சீனுராமசாமி. இவர் இயக்கிய `தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. சில பிரச்சினைகள் காரணமாக இவருடைய டைரக்‌ஷனில் உருவான `இடம் பொருள் ஏவல்,' `மாமனிதன்' ஆகிய 2 படங்களும் `ரிலீஸ்' ஆகாமல், வருடக்கணக்கில் முடங்கி கிடக்கின்றன. 2 படங்களிலும் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். `இடம் பொருள் ஏவல்' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். `மாமனிதன்' படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். 2 படங்களும் `ரிலீஸ்' ஆகாதது பற்றி ஒரு ரசிகர் டுவிட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார். ``தமிழ் சினிமா மரணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதா?'' என்று…

70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?நடிகர் ரஜினி

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து ஐதராபாத்தில் நடந்த தர்பார் பட விழாவில் ரஜினிகாந்த் சுவாரஸ்யமாக பேசினார். ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. தெலுங்கு தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொஞ்சமாக ஆசைப்படுங்கள் “தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக…

பயங்கரவாத சதிகளில் குவாசிம் சுலைமானிக்கு பங்கு

புதுடெல்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் குவாசிம் சுலைமானி பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- பயங்கரவாதத்தின் ஆட்சி முடிந்துவிட்டது. குவாசிம் சுலைமானிக்கு புதுடெல்லி மற்றும் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் பங்கு இருந்தது. ஈராக்கில் அமெரிக்க இலக்குகள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், ஒரு அமெரிக்கரை கொன்ற ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் நான்கு அமெரிக்க படை வீரர்களை மிகவும் மோசமாகக் காயப்படுத்தியது, அத்துடன் பாக்தாத்தில்…

இந்திய குடியுரிமை சட்டம் யாமினி ஐயர் எழுதிய கட்டுரை இது..!

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கும் ( Citizenship Amendment Act) அதனோடு சேர்ந்துவரக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (National Register of Citizens) எதிரான போராட்டத்தில் எதிர்பாராத நேசசக்திகளாக இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெளிக்கிளம்பியிருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒரு சில நாட்களில் பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அந்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள். நாடெங்கும் எதிர்ப்பியக்கங்கள் தீவிரமடையத் தொடங்கியதும் ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாய்க்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டத்தக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். முன்னதாக இவர்கள் இருவரினதும் கட்சிகள் அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் வாக்களித்திருந்தன.இதையடுத்து குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்க்கினற மாநில அரசாங்கங்களின எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துவிட்டது. இந்த எதிர்ப்பின்…

05.01.2020 காலை வரை சிறிலங்காவில் இடம் பெற்ற முக்கிய செய்திகள்

நாடு முன்நோக்கி பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் தனக்கு முன்பாக உள்ள பாரிய கல்லை உடைத்து முன்நோக்கி பயணிக்கும் ஒரு பலம் பொருந்திய கப்பலை ஒத்த தலைவராவார். ஆனப்படியால் சஜித் என்ற டைனமோ சிறிய துவிச்சக்கர வண்டிக்கு மாத்திரமே பொருந்தும் ஆனால் கோட்டா என்ற பாரிய கப்பலுக்கு பொறுந்தாது. சஜித் ஜனாதிபதியுடன் சிறந்த நட்பை கொண்டிருக்கலாம் ஆனால் முச்சக்கர வண்டியின் டைனமோவை பயன்படுத்தி பாரிய கப்பலை முன்னோக்கி நகர்த்த முடியாது. எனவே பொதுத் தேர்தலுக்கு பின்னரும்…