அண்ணன் தம்பி மோதலில் அண்ணன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் மற்றைய சகோதரன் காயமடைந்துள்ளார். காசு பிணக்கு காரணமாக யாழ். பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் காசு பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது. வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில் , அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான…

யோகசாமி என்ற அழகன் இன்று இல்லை

நேர் உச்சிக்கு சற்று இடது புறமாக வகிடு விட்டு அலை போன்று கேசத்தை மேடும் (இம்மாதிரியான ஸ்ரைலை ‘குணுக்கு’ என அழைப்போம்.) பள்ளமாக கொண்ட மாநிறம் உடையவரும், பார்த்தவர்களை உடன் வசீகரிக்கக் கூடிய புன்னகையும் அழகிய தோற்றமும் கொண்டவர்தான் நான் முதலில் பார்த்த யோகசாமி மாஸ்ரர். வாலிபோல் என்ற கரப்பந்தாட்டத்தில் என்னை முதன் முதலாக ஈர்த்தவர்களில் அரியாலை விளையாட்டுக் கழகத்திற்காக ஆடிய சீவரத்தினம், குணரத்தினம், மற்றும் இரத்தினசிங்கம் மாஸ்ரர். அடுத்ததாக நவஜீவன்ஸ், யங்கம்பன் போன்ற கழகங்களுக்காக ஆடிய தங்கவடிவேல் மாஸ்ரர், யோகசாமி மாஸ்ரர், மற்றும் விஜயன் ஆகியோர். செற்றப் ஆட்டத்திலும், உலக அங்கீகாரம் பெறாத ஓவர் கரப்பந்தாட்டத்திலும் சரி இவர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவதை எனது சிறுவயதில் பார்த்து மகிழ்ந்துள்ளேன். இவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரர், யோகசாமி மாஸ்ரர் ஆகியோர் தொடர்ந்து சிவியான் மைதானம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளில்…

தமிழில் நடிக்க அமிதாப்பாச்சான் 40 நாட்கள் தமிழகம் வருகிறார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இதுவரை தமிழ் படங்களில் நடித்ததில்லை. சிவாஜி, 2.0 படங்களில் ரஜினியுடன் நடிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் வெவ்வேறு காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் வருடக்கணக்கில் அமிதாப்பை பின்தொடர்ந்து தமிழில் நடிக்க அவரது கால்ஷீட் பெற்று வந்திருக்கிறார். ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன். அவர், ‘உயர்ந்த மனிதன்’ என்ற புதிய பட ஸ்கிரிப்ட்டை எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறினார். அவருக்கு பிடித்தது. பிரதான வேடமொன்று படத்தில் இடம்பெறுவதால் அதற்காக ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என பேசப்பட்ட நிலையில் பின்னர் அமிதாப்பை அணுக முடிவு செய்யப்பட்டது. மும்பை சென்ற இயக்குனரும், எஸ்.ஜே. சூர்யாவும் அமிதாப்பை நேரில் சந்தித்து கதை கூறினர். அதை கேட்டவுடன் சில மாற்றங்கள் கூறி இதனை ஸ்கிரிப்ட்டில் செய்தால் நன்றாக இருக்கும் என்று அமிதாப் கூறினார். அதை ஏற்று ஸ்கிரிப்ட்டில்…

மறுபடியும் ஆபாச காட்சியில் காஜல்

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார். பாரீஸ் பாரீஸ் பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் காஜலுக்கு சக தோழி பாலியல் தொல்லை தரும் ஆபாச காட்சி இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. அக்காட்சிபற்றி விளக்கம் எதுவும் அளிக்காமல் தனது வேலையை தொடர்ந்து கவனித்து வருகிறார் காஜல். ஏற்கனவே குயின் படம் தெலுங்கில் மகாலட்சுமி பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் தமன்னா கதாநாயகி யாக நடிக்கிறார். அப்படத்தின் டீஸரில் அதிர்ச்சி தரும் ஆபாச காட்சிகள் இல்லாததால் காஜல் தமிழில் நடித்துள்ள இப்படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பலரும் ஆசை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கில் சீதா படத்தில் நடித்து வருகிறார்…

புதுதோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா

நயன்தாராவுக்கு சக நடிகைகளில் நெருக்கமான தோழி என்று கூறிக்கொள்ளும் வகையில் யாரும் இல்லா விட்டாலும் மீடியாக்களால் மோதலில் தொடங்கிய பிரச்னை நயன்தாராவையும், திரிஷாவும் தோழிகளாக இணைத்தது. இந்த நட்பு விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படத்தில் இருவரையும் இணைத்து நடிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. யார் கண்பட்டதோ அதில் சர்ச்சை ஏற்பட்டு திரிஷா நடிக்காமல் ஒதுங்கி விட்டார். இதனால் அப்படம் ஆரம்பநிலையிலேயே நிற்கிறது. இதற்கிடையில் நயன்தாராவுக்கு புதிய தோழியாக கிடைத்திருக்கிறார் தமன்னா. சிரஞ்சீவி நடிக்கும், ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் பிரதான வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதையடுத்து சிரஞ்சிவி நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின் களும் இணைந்து நடிக்க உள்ளதாக…

காதலர் தினத்தில் வருகிறது மஞ்சு வாரியர் திரைப்படம்

பிரியா பிரகாஷ் வாரியருக்கு பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லாமல் முதல் திரைப்படம் ரிலீஸாகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் டீஸரில் இடம்பெற்ற அவரது கண் சிமிட்டும் காட்சி அவ்வளவு பிரபலமானது. இந்தத் திரைப்படம் வருகிற காதலர் தினத்தன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ரிலீஸாக உள்ளது. ‘ஒரு அடார் லவ்’ படத்தின் தமிழ் பதிப்பு விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த ‘கண் சிமிட்டி’ பிரியா பிரகாஷ் வாரியருடன் ஒரு நேர்காணல்.. படத்தில் நீங்களும் ரோஷனும் கண்களால் காதல் பரிமாறும் காட்சி சர்வதேச அளவில் வைரலானது. அந்தச் சூடு தணிவதற்குள் படத்தை ரிலீஸ் செய்திருக்கலாமே? படத்தோட ஆரம்பகால படப்பிடிப்பில் அந்த பாட்டை மட்டும்தான் ஷூட் செய் திருந்தோம். அது முடிந்ததும் அடுத்தகட்ட ஷெட்யூலுக்கு தயாராகிவந்த நேரத்தில், இதை ஒரு ‘சினி கிளிப்ஸ்’ மாதிரி…

பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி போதன் என்பவர் சிவில் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகரில் எல்எல்பி பட்டப்படிப்பை முடித்த சுமன் குமாரி போதன், கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்றார். அதன்பின் தனியார் சட்டசேவை நிறுவனத்தில் சுமன் குமாரி பணியாற்றி வந்தார். இந்நிலையில், நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து சிவில் நீதிபதியாகத் தனது சொந்த மாவட்டமான ஷகதாபாத் மாவட்டத்திலேயே சுமன் குமாரி பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து சுமன் குமார் போதனின் தந்தை பவன் குமார் போதன் கண் மருத்துவர். அவர் கூறுகையில், "என்னுடைய மகள் சுமன் குமாரி, அவரின் சொந்த மாவட்டத்திலேயே ஏழைகளுக்கு உதவ…

ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் காலமானர். கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இது தவிற தொழில் துறை, ரயில்வே போன்ற துறைகளிலும் அமைச்சராக பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்ட இவர் பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சமதா கட்சியை தோற்றுவித்த இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர். அதன்பின் நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை அமைச்சரானர். மேலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு…

யாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பஸ் நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வர்த்தக தொகுதி ,வாகன தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைத்து மேம்பாலமும் கட்டப்படவுள்ளது. இதற்காக 400 மில்லியன் ரூபா நிதியினை பெருநகர மேல்மாகாண அமைச்சு ஒதுக்கியுள்ளது. யாழ். மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும், தவறும் பட்சத்தில் மாநகர கட்டளை சட்டத்தின் பிரகாரம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். அது தொடர்பில் முதல்வர் தெரிவிக்கையில் , தற்போதைய மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண நகரப்பகுதியில்…