அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தி கோட்’.
இதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அவருடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
அஜித், அக்ஷய் குமார், சிவகார்த்திகேயன் படங்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தார்கள்.
தற்போது மலேசியாவில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் வெங்கட் பிரபு.
அதில் ‘தி கோட்’ படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படம் குறித்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.
முன்னதாக, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி இணைவதாக இருந்தது.
ஆனால், வெங்கட் பிரபு கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிடவே, ‘தி கோட்’ படத்தை ஏஜிஎஸ் தயாரித்தது.
தற்போது சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.