கிங்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ராணி முகர்ஜி.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படம் ‘கிங்’. மே 20-ம் தேதி இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.
இதற்காக ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஷாருக்கானுடன் நடிக்கும் நடிகர்கள் ஒப்பந்தமும் நடைபெற்று வருகிறது.
தீபிகா படுகோன், ஷாருக்கானின் மகள் சுஹானா, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்சாத் வர்சி மற்றும் அபய் வர்மா உள்ளிட்டோர் இதுவரை ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்தகட்டமாக வெளிநாட்டில் மொத்தமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
தற்போது ஷாருக்கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ராணி முகர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குச் குஜ் ஹோத்தா ஹே, கபி குஷி கபி கம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு ஷாரூக்கான் – ராணி முகர்ஜி இணைந்து நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் மர்பிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.