நாயகன் ஆகிறார் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.
‘கூலி’ படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு தான், ‘கைதி 2’ இயக்கவுள்ளார்.
லோகேஷ் நடிக்கும் படத்த்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள்.
தற்போது அருண் மாதேஸ்வரன் கதையை இறுதி செய்து, முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இப்படத்துக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
‘கூலி’ இறுதிகட்டப் பணிகள் முடிந்தவுடன் முழுமையாக இதில் கவனம் செலுத்தவுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் படத்தை முடித்துவிட்டு, இந்தாண்டு இறுதியில் ‘கைதி 2’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கேவிஎன் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.

Related posts