எனக்கு பலரும் பணம் தரணும்!” – யோகி பாபு

“எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும்…” என்று பட விழாவில் பேசும்போது யோகி பாபு காட்டமாக குறிப்பிட்டார்.
சில தினங்களுக்கு முன்பு ‘கஜானா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் யோகி பாபு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு ரூ.7 லட்சம் கேட்பதாக தயாரிப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டினார்.
இது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ‘கஜானா’ தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனிடையே யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் யோகி பாபு கலந்துகொண்டு பேசும்போது, “என் சம்பளம் எவ்வளவு என்று எனக்கே தெரியாது.
அனைத்தையும் வெளியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்களே சம்பளத்தை முடிவு செய்து நல்ல கதைகளை அனுப்புங்கள்.
ஆனால், சொன்ன சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். சம்பள பாக்கியை கேட்டால் தான் இங்கு எதிரியாகி விடுகிறேன். அதுதான் உண்மை.
கடந்த இரண்டு விழாக்களுக்கு வரவில்லை. அது சம்பந்தமாக பலரும் என் மீது குற்றம்சாட்டினார்கள்.
அந்தப் படம் என்னிடம் உதவியாளராக வேலை செய்தவர் நாயகனாக நடித்த படம்.
அதில் 2 நாட்கள் நடித்துக் கொடுக்க முடியுமா என்றார்கள்; நடித்தும் கொடுத்தேன்.
அதில் நான் நாயகன் அல்ல. அதற்குத் தான் ரூ.7 லட்சம் கேட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் என்னுடைய படம், அழைத்தார்கள் உடனே வந்துவிட்டேன்.
எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும்.
அந்த லிஸ்ட்டை எடுத்துக் கொடுத்தால் பணம் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன் என்றால் சொல்லுங்கள், கொடுக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை நான் அனைவருக்குமே உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
என்னைப் பற்றி பேசுபவர்கள் பேசட்டும், அவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.

Related posts