விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மே 30-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் தேவரகொண்டா.
இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
‘ஷாம் சிங்கா ராய்’ படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படம் இது.
இதில் நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இறுதியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘டியர் காம்ரேட்’ படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது.
தற்போது விஜய் தேவரகொண்டா உடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வரலாற்றுப் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது.