இன்னும் 100 நாட்கள் ‘கூலி’

ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது முதலே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் கதை முன்கூட்டியே இணையத்தில் வெளியானது படக்குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த முறை படம் குறித்த எந்த தகவலும் வெளியே கசியாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறது படக்குழு.

இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் சவுபின் சாகீர், உபேந்திரா, நாகர்ஜுனா, சத்யராஜ், கடைசியாக ரஜினி ஆகியோரின் ஒரு நொடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ரஜினி வரும் காட்சியை ‘தளபதி’ படத்தின் சூரிய அஸ்தமனம் பிரேமுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

அதே போல வீடியோவின் பின்னணியில் அனிருத் இசையில் ஒலிக்கும் பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts