‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு மகிழ்ச்சி

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு காட்சிகள் அதிகரித்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இப்படத்தினை பார்த்த யாருமே, குறைச் சொல்லாத காரணத்தினால் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரித்து வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

முதலில் சில திரையரங்குகளில், சின்ன திரைகளே கிடைத்தன. தற்போது பெரிய திரைகளில் சில காட்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் நாளில் மாயாஜாலில் 15 காட்சிகள் மட்டுமே ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு கொடுக்கப்பட்டது.

தற்போது 30-க்கும் அதிகமான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு திரையரங்குகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வரவேற்பினால் வசூலும் அதிகரித்து வருகிறது.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் யுவராஜ் தயாரித்த இப்படத்தினை எம்.எஸ்.எம் நிறுவனத்தின் மூலம் அவரே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts