நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. மே 1-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பெரும் வசூல் படைக்கும் இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார் நானி.
சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹிட் 3’.
முதல் இரண்டு பாகமுமே பெரும் வெற்றியடைந்து இருந்ததால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மேலும், அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்தினார் நானி. இது அவருக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.
நானியின் திரையுலக வாழ்க்கையில் ‘ஹிட் 3’ படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.
மேலும், தொடர்ச்சியாக தனது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார் நானி.
இப்படத்துக்குப் பிறகு ‘தி பாரடைஸ்’ படத்தின் நடிக்கவுள்ளார். அதற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.