மீண்டும் இணையும் ஷாரூக்கான் – தீபிகா படுகோன்

‘கிங்’ படத்தில் ஷாரூக்கான் உடன் இணைந்து நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெண் குழந்தைக்கு தாயானார் தீபிகா படுகோன். இதனைத் தொடர்ந்து நடிப்பதற்கு இடைவெளிவிட்டு, முழுக்க குழந்தையுடனே நேரம் செலவழித்து வந்தார். இதனால், அவர் ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் தாமதமானது. எப்போது மீண்டும் நடிக்க திரும்புவார் என்பதே தெரியாமல் இருந்தது.
தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள ‘கிங்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க திரும்பவுள்ளார் தீபிகா படுகோன். இதில் ஷாரூக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஷாரூக்கான் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷாரூக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
மே 18-ம் தேதி முதல் மும்பையில் ‘கிங்’ படப்பிடிப்பு தொடங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்துவிட்டு, பின்பு அனைத்து படப்பிடிப்புமே வெளிநாடுகளில் தான் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பல்வேறு ஹாலிவுட் கலைஞர்கள் சண்டைக் காட்சிகளில் பணிபுரியவுள்ளனர். இதனை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Related posts