‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் சிவராஜ்குமார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழக – கேரளா எல்லையில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பார்களா என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்திருக்கிறார். “ஆம், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறேன். எனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.
மேலும், ‘ஜெயிலர்’ படத்துக்கான வரவேற்பு குறித்து, “‘ஜெயிலர்’ படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், உண்மையில் இவ்வளவு பெரிய அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாயில் சிகரெட் உடன் டிசியூ டப்பாவை தட்டிவிட்டேன். அவ்வளவு தான்” என்று கூறியிருக்கிறார் சிவராஜ்குமார்.