காந்தாரா : 20 நாளில் 10 மடங்கு லாபம்

ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம், வெளியான 20 நாட்களிலேயே, கன்னடத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கே.ஜி.எப். படத்தின் பிரமாண்டத்திற்குப் பிறகு, இந்திய ரசிகர்களின் பார்வை, கன்னட சினிமாவின் மீதும் பதிந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை ‘777 சார்லி’, ‘காந்தாரா’ போன்ற திரைப்பட இயக்குனர்களும், நடிகர்களும் காப்பாற்றி வருகிறார்கள் என்பதே பெருமைக்குரியதுதான். எம்.பி.ஏ., பட்டதாரியான ரிஷப் ஷெட்டி, கன்னட அரசு சினிமா கல்லூரியில் பிலிம் டைரக்‌ஷனில் டிப்ளமோ பட்டமும் பெற்றவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்த ரிஷப் ஷெட்டி, 2010-ம் ஆண்டு ‘நம் ஏரியாலி ஆன்டினா’ என்ற படத்தின் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், இயக்கமும் அவர் கனவாக இருந்தது. 2016-ம் ஆண்டு கன்னடத்தின் இளம் நாயகனான ரக்‌ஷித் ஷெட்டியை வைத்து, ‘ரிக்கி’…