அந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் சாரிடம் அந்தகாரம் படக்குழு வாழ்த்துகளைப் பெற்றுள்ளது என்று இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக அந்தகாரம் என்கிற படத்தை வெளியிட்டுள்ளார். விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை - பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ல் நேரடியாக வெளியானது. இந்நிலையில் அந்தகாரம் படக்குழுவினரை கமல் ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் . இச்சந்திப்பின் புகைப்படங்களைப் அட்லி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- கமல்…

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு…