நீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது ?

நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம், தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது. அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன் பிரதாப்போத்தன், பாண்டியராஜன், உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கும் நிலையில் நடிகை ஜோதிகா ஜூம் ஆப் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்த ஜோதிகவிடம், சமூக சேவை செய்து வரும் சிவகுமார் குடும்பத்திலிருந்து யாருமே அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோதிகா,…

தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது

தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். இந்தியாவில் ஊரடங்கு காரணமாக 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறியிருந்தது. ஊரடங்கு, வேலை இழப்பு, சமூக இடைவெளி ஆகியவை காரணமாக, இந்தியாவில், கோடிக்கணக்கான உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளே, கொரோனா பரவலுக்கும் காரணமாக அமைந்து விட்டது. குறிப்பாக, இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, ஓரிரண்டு நாட்களில், சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தொழிலாளர்கள், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர் என அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது. புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களில் இருந்து அவர்களை பாதுகாக்க சுகாதார பணிகளில்…

கொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது

இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. கொரோனா முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும்16,86,436- பேருக்கு இதுவரை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒருலட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 4,51,702- பேர் மீண்டுள்ளனர். அதேபோல், பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளும் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன. இந்தியாவில் கடந்த சில தினங்களாக…

உரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்

உரிமையாளர் கொரோனாவுக்கு பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாய் சீனாவின் உகான் நகர மருத்துவமனையில் உரிமையாளர் திரும்ப வருவதும் எதிர்பார்த்து 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாயை தற்போது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். உகான் மருத்துவமனை ஊழியர்களால் தற்போது சியாவ் பாவோ என பெயரிடப்பட்டுள்ள 7 வயது கலப்பின நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் அதன் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் குறித்த முதியவரால் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 5 நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக பலியானார். தமது உரிமையாளர் திரும்ப வந்து தம்மையும் அழைத்துக் கொண்டு குடியிருப்புக்கு செல்வார் என அந்த நாய் அங்கேயே காத்திருந்துள்ளது.மருத்துவமனை ஊழியர்கள் துரத்தியும் அந்த நாய் அங்கிருந்து வெளியேற மறுத்து வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அதன் உரிமையாளர் விட்டுச் சென்ற பகுதியிலேயே அந்த…

இன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020

இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் இதுவரை 96 கொரோனா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. —– இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 10 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி நாட்டில்…