விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்?

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி பயிற்சி முகாம்கள் அமைக்க முயன்ற காலத்தில் இடம் தந்து உதவ முன்வந்தவர் மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார். நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலக்குறைவால் நேற்று (24) இரவு காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம். கடந்த 1972 இல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை பொலிஸார் தாக்கும் போது, சேலம் லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதுகுறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம். அதன் பின் பாபநாசம்,…

சூர்யாவுக்கு விபத்தா? உண்மையில் நடந்தது என்ன?

சூர்யாவுக்கு விபத்து என்று பரவிவரும் தகவல் குறித்து விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. கரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் வெளியீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கினால் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறார் சூர்யா. இதனிடையே இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் சூர்யா கையில் மருத்துவமனை ஸ்டிக்குடன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்களோ #GetWellSoonSuriyaAnna என்று ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். இது தொடர்பாக சூர்யா தரப்பில் விசாரித்தபோது, "கடந்த வாரம் சூர்யா சார் வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது, கையின் விரல் பகுதியில் சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டன. உடனே மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.…

ஒரே மாதிரியான படங்களில் நடிக்கப் பிடிக்கவில்லை

ஒரே மாதிரியான படங்களிலேயே நடிப்பதற்குப் பிடிக்கவில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது படத்தின் கதைக்களம், 2டி நிறுவனம், கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜோதிகா. அதில், "புதுமுக இயக்குநர்களின் படங்களிலேயே அதிகமாக நடிப்பது ஏன்" என்ற கேள்விக்கு ஜோதிகா கூறியதாவது: "புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது சவாலானது. ரொம்ப புதிதான கதைக்களம் எழுதுவார்கள். இந்த இடத்தில்…

தியேட்டர்களுக்கு பதிலாக டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் மேலும் 2 படங்கள்

கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்களை நேரடியாக இணையதளத்தில் வெளியிடும் முயற்சியில் சில தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழில் தயாரான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் இணையதளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்தியில் உருவான விர்ஜின் பானுப்ரியா. தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தயாரான கிளைமேக்ஸ் ஆகிய மேலும் 2 படங்கள் இணையதளத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து விர்ஜின் பானுப்ரியா படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரா தாரிவால் கூறும்போது, “தியேட்டர்களை மீண்டும் திறப்பதில் உறுதியற்ற தன்மை நிலவுகிறது. தியேட்டர்களுக்காக இனிமேல் காத்திருக்கவும் முடியாது எனவேதான்…

வாழ்க்கை, பந்தயம் இல்லை – நடிகை அமலாபால்

வாழ்க்கை, பந்தயம் இல்லை என்று நடிகை அமலாபால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். ஓய்வு நேரத்தை செல்லப்பிராணிகளை கொஞ்சுதல், உடற்பயிற்சி, சமையல் செய்தல், புத்தகம் படித்தல், நடனம் கற்றல், ஓவியம் வரைதல் என்று கழிக்கின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க சமூக விலகலை கடைபிடிக்கும்படி பேசி வீடியோவும் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இந்த ஊரடங்கில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். வாழ்க்கை என்றாலே போட்டி பந்தயம் என்று நினைக்கும் மனோபாவத்தில் இருந்து மாற வேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த ஊரடங்கு காலத்தில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றோ,…

ஒல்லி தேகத்துக்கு மாற பிரணிதா யோசனை

ஒல்லி தேகத்துக்கு மாற நடிகை பிரணிதா யோசனை தெரிவித்துள்ளார். தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டு விட்டனர். டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. சரித்திர காலத்து ஆடை அணிகலன்கள் அணிந்து நடிக்க விருப்பம் உள்ளது. என்னை மாதிரி ஒல்லியாக இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றனர். எண்ணெய் சேர்க்காத உணவு வகைகளை சாப்பிட்டாலே யாரும் எடையே கூட மாட்டார்கள்.…