மொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது

உலக அளவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்படும் தினசரி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால், இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது. இந்தியாவில் இருமுறை உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளும் திண்டாடி வருகின்றன. உலக அளவில் கடந்த வாரம் 57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு பலியாகினர். இந்த…

நாக்கை அறுத்துக்கொண்ட திமுக பெண் தொண்டர்: மு.க.ஸ்டாலின் வருத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா(வயது 32). தி.மு.க. தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டிக் கொண்டார். இந்தசூழலில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதுடன், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க இருப்பதால், வனிதா தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று காலை முத்தாலம்மன் கோவிலுக்கு வந்தார். ஆனால் கோவில் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தனது காணிக்கையை செலுத்த வேண்டும் என்பதற்காக வனிதா திடீரென கத்தியால் நாக்கை அறுத்து கோவில் படியில் வைத்துள்ளார். ரத்தம் கொட்டியதால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே வனிதா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வனிதாவை தூக்கினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

இந்தியாவின் நிலையே இங்கும் ஏற்படலாம்

நாட்டு மக்கள் சுகாதார சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றாது செயற்பட்டால் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இலங்கையிலும் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகும் என இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் வைரஸ் தொற்று நோயாளர்களின் தொகை பெருமளவு அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்காத மக்கள் உதாசீனப் போக்குடன் செயல்பட்டால் தற்போது இந்தியாவில் நிலவும் நிலைமையே இலங்கைக்கும் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டின் தற்போதைய வைரஸ் பரவல் தொடர்பில் விசேட மருத்துவ நிபுணரும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளருமான சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்; நாட்டில் பிரித்தானியாவின் திரிபுபடுத்தப்பட்ட…

உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 17

எம்மைத் தாழ்த்தும் எல்லாச் சூழ்நிலையிலும் உதவும் தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை. லூக்கா 7:7. உலகில் வாழும் மக்கள் யாவரும் யுத்தத்தையும், அதன் விளைவுகளயும் பற்றி அறிக்கைகளையும், கருத்துக்களையும் பேசிவருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் கபடமும் சுயநலம் கருதிய செயலும் என நாம் அறிவோம். ஆனால் அவற்றில் இருந்து விடுபட விரும்பாததால் இலங்கைத் தமிழ் மக்களும், உலகம் தாங்கொண துயரத்தை அனுபவிப்பதை நாம் காண்கிறோம். இவற்றிற்கு மூலகாரணம் பெருமை என்ற ஆணிவேராகும். (இன்றைய இலங்கையின் நிலைவரமும் இதுதான்). இன்றைய தியானத்தை நன்றாக விளங்கிக்கொள்ள லூக்கா 7:1-10 வரை வாசித்துப் பார்க்கவும். ஒருஇராணுவ உயர்அதிகாரின் இராணுவவீரன் கடும்நோயினால் பாதிக்கப் பட்டு மிகவும் வேதனையுடன் காணப்பட்டான். அந்த வேதனையை உயர்…

பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி – தொல். திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் வியூகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கின்றது.. கலைஞருக்கு பின்னால் கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வருகின்ற ஸ்டாலின் அவர்கள், கூட்டணியையும் சிதறவிடாமல் கட்டுக்கோப்பாக வழிநடத்தி, மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார். 6வது முறையாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் ஏறுகிறது. ராஜதந்திரத்தில் வல்லவர், ஆளுமை மிக்கவர் என்பதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே தனது லட்சியம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனா. மேலும்…

மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து

மேற்கு வங்காளத்தில் 202- தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு அக்கட்சி ஆட்சியை தக்க வைக்கும் எனத்தெரிகிறது. மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இன்று மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 83 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை…

இந்தியாவில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கடந்த 22-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் தொடர்ந்து தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று, இந்தியாவில் தாக்கி வந்தது. இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரத்து 457 ஆக…

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது திமுக

சட்டமன்ற தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தமிழகத்தில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 157 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், திமுக வெற்றி பெறுவதற்கு தேவையான பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்தாலும், இனி…

தேச துரோகச் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல்

தேச துரோகச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக இதேபோன்ற மனுவை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்தனர், ஆனால், அந்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கமேச்சா, சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கண்ஹையா லால் சுக்லா ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யுயு லலித், இந்திரா பானர்ஜி, கே.எஸ். ஜோஸப் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது கடந்த 1962-ம்…