வடகொரியா: நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை

புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வட கொரியா செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், சமீப காலமாக வட கொரியா சோதனை செய்து வரும் பலிஸ்டிக் (ballistic) ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏவுகணையை வடகொரியா ஜப்பானின் கடற்பரப்பில் செலுத்தி சோதனை நடத்தி உள்ளது என தென்கொரியா தெரிவித்து உள்ளது. வடகொரியா ஜனவரி மாதம் ஏவுகணையை சோதனை செய்தது. இது "உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்" என்று கூறப்பட்டது. மேலும் வட கொரியா சமீபத்தில் பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது, இதில் ஹைப்பர்சோனிக் மற்றும் நீண்ட தூர ஆயுதங்கள் என்று கூறப்பட்டது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைமை அதிகாரிகள் கூறியதாவது:…

எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம்..

சீன ராணுவத்தின் எல்லை ரோந்து மற்றும் வருடாந்திர பயிற்சிகள் அதிகரித்து உள்ளதாக கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார். எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளதாக கூறியுள்ள கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளார். சீன ராணுவத்தின் எல்லை ரோந்து மற்றும் வருடாந்திர பயிற்சிகள் அதிகரித்து உள்ளதாக கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார். ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாட்டு பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்கள் ஆயுதப்படைகளின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைக்கிறார்கள். இந்த ஆண்டு அட்ன் அளவு அதிகரித்துள்ளது மற்றும் அவை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வருகின்றன. சில பகுதிகளில் சீனப்படை ரோந்துப் பணியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது ஆனால்…

இந்திய மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக பொலிஸார் அந்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களுக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அனுமதி வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரப் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்து மதம் உலக மதமாக மாறாதது ஏன்?

உலகளாவிய மதமாக கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது. இந்து மதம் உலக மதமாக மாறாதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் இயற்கை மருத்துவம் தொடர்பான சிசிச்சை மையத்தைப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்றார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசு இயற்கை மருத்துவத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இயற்கை மருத்துவர்களுக்கான வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும். ஆங்கில, இந்திய மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில், இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவுகளை அனுமதிக்க வேண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான…

43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள். டெய்லர்ஸ் ரோடு…

ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நேற்று (16) சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை அவர் ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், அவர் மன்னார் மாவட்டத்திற்கு நேற்று (16) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக் கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல

இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவு- பருத்தித்துறை வரை இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைக்கு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல எனக் குறிப்பிட்டார். தமிழ்நாடு மீனவர்களில் ஒருசிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயற்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார். அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ்…

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று மு.ப. 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று மு.ப. 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் ட்றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை…

நமக்குள் ஒற்றுமை தான் முக்கியம் சசிகலா !

தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு தெரியும் என சசிகலா கூறினார். சென்னை ராமாபுரத்தில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு தான் சென்றேன். தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு தெரியும். அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டியது நேரமிது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நமக்குத்தேவை ஒற்றுமைதான்; நீரடித்து நீர் விலகாது. மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எந்த பொறுப்பில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும் என்றார்.

ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

அபே ஜனபல கட்சியின் (எமது மக்கள் கட்சி) தேசியப் பட்டியல் எம்.பி. யான அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (15) இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்.பி. பதவி தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறித்த பதவிக்கு வர ஞானசார தேரர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொது பல சேனா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் அபே ஜனபல கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவியில் காணப்பட்ட இழுபறியைத் தொடர்ந்து அக்கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, கடந்த டிசம்பர் மாதம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அப்பதவிக்கு அத்துரலியே ரத்தன…