தடுப்பூசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படுமா…?

மராட்டிய மாநிலம் நாசிக்கின் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார் (67). இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனது உடலில் காந்த சக்தி அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.அவர் உடலில் எந்தப் பாகத்தில் இரும்பு பாத்திரத்தை வைத்தாலும் அவை டப்பென்று ஒட்டிக்கொள்ளத் தொடங்கின. அவர் கையில் ஸ்பூன், நாணயங்களை வைத்தால் அப்படியே ஒட்டிக்கொள்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது என்றே நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து இதுபோல நடக்க, இதனை அரவிந்த் ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இன்னொரு பக்கம், அரவிந்த்துக்கு உடம்பில் என்ன பிரச்சினையோ என்று அவர் குடும்பத்தில் குழப்பம் அடைந்துள்ளனர். அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்று சோதித்தனர். டாக்டர்கள்…