பில் கிளின்டன் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கரோனா தொற்று இல்லை. ரத்தத்தில் ஏற்பட்டுள்ள வேறு தொற்றின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள இர்வைன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கிளின்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் உரேனா, கிளின்டன் தேறி வருகிறார். அவர் உற்சாகமாகவே இருக்கிறார். மருத்துவர்களுக்கு நன்றி. கூடவே அவரை கவனித்துக் கொண்ட செவிலியருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். கிளின்டனுக்கு குளுகோஸ் மூலம் ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். பில் கிளின்டன் அமெரிக்காவின் 42வது அதிபராக 1993 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்தார். அவர் தனது 58வது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை

நோர்வே நாட்டில், மர்மநபர் ஒருவர் அம்பு, வில்லை பயன்படுத்தி பொதுமக்கள் மீது எய்து 5 பேரை கொன்றுள்ளதோடு, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார். இதில் 2 பொலிஸார் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் கொங்ஸ்பேர்க் (Kongsberg) நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் மர்ம மனிதர் ஒருவரால் இப்பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தலைநகரின் மையப்பகுதி இரவு நேரத்தில் பொதுமக்கள் பரபரப்பாக இருந்த இருந்த வேளையில், கையில், விம், அம்புடன் வந்த அந்த நபர், மக்களை அம்புகள் எய்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சராமரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார். சுற்றி என்ன நடப்பது என்று தெரிவதற்கு முன்பே தாக்குதலுக்குள்ளான மக்கள்…