ஜனாதிபதியின் அழைப்பிற்கு புலம்பெயர் சமூகம் வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சமாதானத்தை விரும்பும் தமிழ் சமூகத்தினர் தமது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு ஜனாதிபதி பகிரங்கமாக விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரான அனஸ்லி ரட்ணசிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார். அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை…