ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நேற்று (16) சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை அவர் ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், அவர் மன்னார் மாவட்டத்திற்கு நேற்று (16) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக் கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல

இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவு- பருத்தித்துறை வரை இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைக்கு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல எனக் குறிப்பிட்டார். தமிழ்நாடு மீனவர்களில் ஒருசிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயற்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார். அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ்…

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று மு.ப. 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று மு.ப. 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் ட்றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை…

‘நெஞ்சுக்கு நீதி’ மோஷன் போஸ்டர் வெளியானது

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. கனா திரைப்படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்கு 'நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கில் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதுகுறித்து படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜ், ஆர்ட்டிக்கில் 15 திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய திரைக்கதை எழுதி இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக கூறினார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திபு நினன் தாமஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ்…

கேரள அரசின் 51 வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு

கேரள அரசின் 51 வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “தி கிரேட் இந்தியன் கிச்சன்” சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்படுள்ளது. கேரள அரசின் சார்பில் 2020-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 51-வது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணியாற்றி உள்ளார். கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகள் பிரிவுக்கு சுமார் 80 படங்கள் போட்டியிட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் பட்டியலின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்) சிறந்த நடிகை: அன்னா பென் (கப்பேலா) சிறந்த திரைப்படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி) சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம்: அய்யப்பனும் கோசியும் (இயக்குநர் சச்சி) கலைநயமிக்க திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர்: சித்தார்த் சிவா (என்னிவர்) சிறந்த…

உடல் எடையை குறைத்தார் சினேகா

நடிகை சினேகா ‘ஜிம்’முக்கு போய் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்தார். வசீகர சிரிப்பழகி சினேகா 2 குழந்தைகளுக்கு அம்மா ஆனபின், தாய்மைக்கே உரிய பூரிப்பில், செழிப்பான தோற்றத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பியதால், உடல் பருமனை குறைக்க முன்வந்தார். இதற்காக, ‘ஜிம்’முக்கு போய் கடுமையான பயிற்சிகள் செய்தார். இதன் மூலம் அவருடைய உடல் எடை 7 கிலோ குறைந்தது. மேலும் எடையை குறைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் முன்பிருந்தது போல் சிரிப்பழகி சினேகாவாக தெரிகிறார். அவருடைய காதல் கணவர் பிரசன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

‘மெட்டி ஒலி’ புகழ் நடிகை உமா மகேஸ்வரி மரணம்

மெட்டி ஒலி' தொடர் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி மரணமடைந்தார். 40 வயதாகும் உமா மகேஸ்வரி, திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்தார். திருமுருகன் மனைவியாக இதில் நடித்த அவர் கேரக்டர் மிகவும் பிரபலமானது. ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும் அவர் நடித்து உள்ளார். கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிக்கவில்லை . சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா மகேஸ்வரி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். சின்ன வயதிலேயே அவர் மரணமடைந்திருப்பது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக…