தீபிகா படுகோனேவுக்கு திடீரென உடல்நல குறைவு

இந்தி திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர், திரை நட்சத்திரங்களான நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோருடன் பதான் படத்தில் நடித்துள்ளார். வரும் ஜனவரி 25-ந்தேதி படம் திரையிட தயாராகி வருகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளிவருகிறது. இதுதவிர, நடிகர் ஹிரித்திக் ரோஷன் உடன் பைட்டர் படத்திலும், மற்றும் நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார்.

Related posts