திரையரங்கு மற்றும் ஓடிடியில் ‘திருச்சிற்றம்பலம்’

இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘ஜீவி-2’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. கூடுதலாக தமிழ் வெப் சீரிஸ் ஒன்றும் வெளியாகிறது.

திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் நாளை (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜீவி 2: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் ‘ஜீவி-2’. விஜே கோபிநாத் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் வெற்றி, அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது.
தமிழ் ராக்கர்ஸ்: இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இணைய தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’. இந்தத் தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனோஜ் குமார் கலைவாணன் எழுத, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் சோனி லிவ் நிறுவனம் இணைந்து இந்த வெப்சீரிஸை தயாரித்துள்ளது. இந்த தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Related posts