அம்பாள் அருளாட்சி புத்தக வெளியீடு டென்மார்க்கில்

எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2022 மாலை 18.00 மணிக்கு அம்பாள் அருளாட்சி என்ற அரிய நூல் டென்மார்க் கிறீன்ஸ்ரட் நகரில் உள்ள கலாச்சார கலையகத்தில் வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த நூல் வல்வை முத்துமாரி அம்மனின் வருகையும், வரலாறும், இன்றைய காலத்தில் புலம் பெயர் இளைய தலை முறையினர் அறிய வேண்டிய பல அரிய தகவல்களும் கொண்ட படைப்பாகும்.

நூலாசிரியர் ந.அரியரத்தினம் அவர்கள் தற்போது இதன் பொருட்டு டென்மார்க் வந்துள்ளார். இந்த நிகழ்வை டென்மார்க் வல்வை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

நூலாசிரியர் சிறந்த அனுபவம், கடின உழைப்பு, இடையறாத தேடுதல் கொண்டு இப்படைப்பை உருவாக்கியுள்ளார். இவர் முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், வல்வை சிதம்பராக்கல்லூரி முன்னாள் அதிபராகவும் இருந்தவர். சிறந்த கல்வியியலாளரான இவர் செல்வச்சந்நிதி முருகன் மேல் பத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதியவராகும். இந் நூலானது வல்வையில் அறிமுகம் செய்யப்பட்டு இப்போது டென்மார்க்கில் வெளியீடும் அறிமுகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து கனடா உட்பட பல நாடுகளில் இந்த வெளியீடு நடைபெற இருக்கிறது.

அலைகள் 15.08.2022

Related posts