எனக்கு எண்டே கிடையாது நடிகர் வடிவேலு

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் தந்தி டிவிக்கு விடியோ மூலம் பேசிய அவர், தனது ரீ- என்ட்ரியால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “நான் வைகை புயல் பேசிகிறேன். வைகை இவ்வளவு நாட்களாக வறண்டு கொண்டிருந்தது. இப்போது வைகை திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள். நன்றி”. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts