இந்த வார இறுதியில் திரையரங்குகளில்..

இந்த வார இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் கவனத்துக்குரிய திரைப்படங்களின் பட்டியல் குறித்துப் பார்ப்போம்.
விருமன்: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள படம் ‘விருமன்’.
2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடமையை செய்: வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் ‘கடமையை செய்’. இதில், மொட்ட ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சித்ரா லக்ஷ்மணன், ஷேஷூ உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லால் சிங் சத்தா: ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் புகழடைந்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆமீர்கான், கரீனா கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்வைத் சந்திரன் இயக்கியுள்ள இப்படம் நாளை (ஆகஸ்ட் 11) வெளியாகிறது. படத்தின் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரக்‌ஷா பந்தன் : ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆன்ந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்சய்குமார் நடித்து படம் ‘ரக்‌ஷா பந்தன்’. பூமி பெட்னேகர், சாடியா கதீப் நடித்துள்ள இப்படம் குடும்பக்கத்தையை பின்னணியாக கொண்ட காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான அக்‌ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘பச்சன் பாண்டே’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், குடும்பக் கதையான இப்படம் வரவேற்பை பெறும் என அக்‌ஷய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் நாளை (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியாகிறது. அன்றைய தினம் ‘லால் சிங் சத்தா’ வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நா தான் கேஸ் கொடு: ஆன்ராய்டு குஞ்சப்பன் பட புகழ் இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நா தான் கேஸ் கொடு’ (Nna, Thaan Case Kodu). மலையாள படமான இது நாளை (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் சைஜூ குரூப், வினய் போர்ட், ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Related posts