6 ஆண்டுகளாக தொல்லை செய்த நபர் …! நடிகை

ஆறு ஆண்டுகளுக்கு மேலாக என்னை தொடர்ந்து கஷ்டப்படுத்தினார். அவருக்கு எதிராக புகார் கொடுக்க எல்லோரும் சொன்னார்கள். நான் அவரை மன்னித்துவிட்டேன்” என்று நடிகை நித்யா மேனன் கூறினார்.
சமீபத்தில் பேசிய நித்யா மேனன் தனக்கு திருமணம் என தகவல் பரப்பி விட்டது சந்தோஷ் என்ற ஒரு நபர் தான் தனக்கு ஆறு வருடங்களாக தொல்லை கொடுத்து வருவதாக கூறி இருக்கிறார்.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ளது 19(1)(ஏ) மலையாளத் திரைப்படம். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தன்னை தொல்லை செய்த இளைஞர் பற்றிநடிகை நித்யா மேனன் பேசி உள்ளார்.
மோகன்லாலின் ஆராட்டு சினிமா குறித்து கருத்து கூறியதால் வைரல் ஆன சந்தோஷ் வர்க்கி நடிகை நித்யா மேனனை திருமணம் செய்யபோவதாகவும் கூறிய கருத்து பற்றி அந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நித்யா மேனன், “அவர் சொல்வதை நம்புகிறவர்கள்தான் முட்டாள்கள். என்னை பல வருடங்களாக அவர் நிறையவே கஷ்டப்படுத்திவிட்டார். அவர் வைரல் ஆன பிறகு வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்.
6 ஆண்டுகளாக தொல்லை செய்த நபர் …! நடிகை நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக என்னைத் தொடர்ந்து கஷ்டப்படுத்தினார். அவருக்கு எதிராக புகார் கொடுக்க எல்லோரும் சொன்னார்கள்.
நான் அவரை மன்னித்துவிட்டேன். அவர் என் அப்பாவையும், அம்மாவையும் போனில் அழைத்து தொந்தரவு செய்தார். இறுதியாக மிகவும் சாந்தமான குணமுள்ள அவர்களும் சத்தம்போட்டு பேசும் நிலை ஏற்பட்டது.
அவரின் 30-க்கும் மேற்பட்ட போன் நம்பர்களை பிளாக் செய்யும் நிலை ஏற்பட்டது” என கூறினார். நித்யா மேனன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையாக பதிலடி கொடுத்த சந்தோஷ் வர்க்கி, “நித்யா மேனனிடம் 2009-ல் அறிமுகமாகி 2021 வரை பழகினேன்.
அவருக்கு நிச்சயம் செய்து விட்டதாக அவருடைய அம்மா சொன்னார். ஆனால். வேறு யாரிடமும் அவருக்கு பந்தம் இல்லை சிங்கிள்தான் என அவரின் அப்பா சொன்னார். இதனால் நான் குழம்பிப்போனேன்.
இது தெரிந்திருந்தால் நான் அவர் பின்னால் சென்று காதலித்திருக்கமாட்டேன். 30-க்கும் மேற்பட்ட நம்பரில் இருந்து அழைத்ததாக சொல்கிறார். இந்திய சட்டப்படி ஒருவருக்கு எத்தனை சிம் கார்டு எடுக்க முடியும் என்று மக்களுக்கு தெரியும்.
என் மீது பாலியல் துன்புறுத்தல் என வழக்கு தொடர முயன்றார்கள். என் தந்தை மறைவுக்குப் பிறகு நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருக்கிறேன். இப்போது நித்யா மேனனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என கூறினார்.

Related posts