ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சென்னை, நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘செல்ஃபி’ திரைப்படத்தை தொடர்ந்து இருவரும் மற்றொரு படத்தில் இணைகின்றனர். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை கே விவேக் இயக்குகிறார்.
சித்து குமார் இசையமைக்கிறார். சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். புலனாய்வு திகில் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ‘அன்வெஷிப்பின் கண்டேதும்’, ‘நிழல்’ போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ஆத்யா பிரசாத் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு ’13’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts