ரிலீசுக்கு தயாரான தனுசின் 2 படங்கள்

தனுசின் திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய 2 படங்களும் ஜூலை மாதம் வெளியாக உள்ளன.

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் கர்ணன், ஜெகமே தந்திரம் மற்றும் இந்தியில் அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் வந்தன. மார்ச் மாதம் மாறன் படம் வெளியானது. தற்போது ஹாலிவுட் படமான தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. மேலும் ராம்குமார், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய 2 படங்களும் ஜூலை மாதம் வெளியாக உள்ளன.

திருச்சிற்றம்பலம் தியேட்டரிலும், தி கிரே மேன் ஓ.டி.டி. தளத்திலும் வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தில் நாயகிகளாக ராஷிகன்னா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தி கிரே மேன் படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் டைரக்டு செய்து உள்ளனர்.

Related posts