இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு

இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம்கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “

இரும்புக் கம்பிகள்
இளமையைத் தின்று தீர்த்தபிறகு
ஒரு மனிதன் வெளியே வருகிறான்

தமிழ்நாட்டு அரசுக்கும்
உச்ச நீதிமன்றத்திற்கும்
வணக்கம்

பேரறிவாளனுக்குத் திறந்த
அதே வாசல் வழியே
சம்பந்தப்பட்ட ஏனையோரும்
வெளிவருமாறு
வெளிவர வேண்டும்
நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு”

என்று அதில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

Related posts