பெண்ணை காப்பாற்ற சென்று உயிரை விட்ட 2 இளைஞர்கள்!

ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சீதாவக ஆற்றின் தெஹியோவிட்ட யோகம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாத்திரை சென்ற குழுவினரில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

இதன்போது, காப்பாற்றச் சென்ற இரண்டு இளைஞர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். பின்னர் பிரதேசவாசிகளால் மூவரும் மீட்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அங்கு இரு இளைஞர்களும் உயிரிழந்ததாக தெஹியோவிட பொலிஸார் தெரிவித்தனர்.

20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts