உன்னதத்தின் ஆறுதல் இரட்சிப்பின வசனம். வாரம் 22. 12

உன்னதத்தின் ஆறுதல. இரட்சிப்பின வசனம். வாரம் 22. 12
கல்வாரி அன்பு !
சகோதரன். பிரான்சிஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபேத் ஊழியஙகள் – டென்மார்க்கிற்காக பிரார்திப்போம்.

தேவன்> தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு> அவரைத் தந்தருளி> இவ்வளவாய்உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3. 16

முரட்டாட்டம் உள்ள மகளை அரவணைத்த தாயார்> ஒரு ஊசியைக் கையிலெடுத்து> நீசெய்யும் ஒவ்வொரு காரியமும் என்னை இப்படித்தான் வேதனைப்படுத்தகிறது பார் என்றுசொல்லி தனது கையில் குத்தினாராம். பீறிட்டு வந்த இரத்தம் மகளின் முகத்தில்பட> அவள்தாயை அரவணைத்துக் கொண்டு> நீங்கள் இவ்வளவாய் என்மேல் அன்பு வைத்திருக்கிறீர்களாஎன்று கதறியளுதாளாம். இந்த அம்மாவின் இரத்தம் அந்தப் பிள்ளையின் வாழ்வைமாற்றியதானால்> இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து பாய்ந்த இரத்தம் இன்று நமதுவாழ்வை என்ன செய்திருக்கிறது?

அன்பற்ற வார்த்தைகளைப் பேசிவிட்டு> அன்பற்ற செயலகளைச் செய்து விட்டுசிறிதேனும் மனக்கலேசம் அடையவில்லை என்றால் அந்த கல்வாரி அன்பு என்னை என்னசெய்ய வைத்திருக்கிறது? பிறருடைய பாவங்களை மிகஎளிதாக குத்திக்காட்டி விட்டு> எனக்குசாதகமான தவறான காரியங்களைக் குறித்து சரி என்று தர்க்கம் பண்ணுவோமானால் கல்வாரிஅன்பு என்னை என்ன செய்திருக்கிறது? ஒருவருக்கு உதவிசெய்தும் அவரிடத்தில் பலன்காணாது இருக்கும்போது> சலிப்படைந்து அவர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்றுவிலகிவிடுவேனாகில் அந்த கல்வாரி அன்பு எங்கே? சிலரின் அன்பை இழந்து விடுவேன்என்றோ எண்ணி, சத்தியத்தை மனதார பேசுவதற்கு பயப்படுவேன் என்றால்> கல்வாரி அன்புஎன்னிடத்தில் எங்கே? என்னை வேதனைக்குள்ளாக்கியவனை நேசிக்கக் கூடிய தருணம்கிடைத்தும் பாராமுகமாக இருப்பேன் என்றால் கல்வாரி அன்பை நான் அறிந்தேன் என்றுசொல்லலாமா?

பிறரால் வெறுக்கப்பட்டு தனிமைப்படுத்தத்படும்போது> நான் விரும்பாத சூழ்நிலைகளைபொறுமையாய் சகிக்கவேண்டியிருக்கும்போது இவை யாவும் என் அர்ப்பணமுள்ள வாழ்வுக்குஅவசியம் என்பதை மறந்து அவற்றில் இருந்து விலக முற்படுவேனாகில் கல்வாரி அன்பை நான்அறிந்தேன் எனலாமா? பிழையைக் கண்டித்து உணர்த்த வேண்டிய இடத்தில்மவுனமாகஇருப்பேன் என்றால் அந்த கல்வாரி அன்பு என்னிடத்தில் எங்கே? தேவனுடைய பணியில்ஏமாற்றம் துக்கம் அன்பானவர்களின் மாறுபாடான செயல்கள் என்பன என்னைத் தாக்கும்போதுஅவற்றை மவுனமாக சகிக்கவில்லையானால்> அந்த கல்வாரி அன்பு என்னிடத்தில் எங்கே? மன்னிப்பதிலும் கண்டித்து உணர்த்தி அடுத்தவனையும் அந்த கல்வாரி அன்புக்குள் கொண்டுவருவதிலும் நான் பின்நிற்பேன் என்றால் அந்த கல்வாரி அன்பு என்னிடத்தில் எங்கே?

என் இயேசுவே> உமது அன்பை அறிந்திருந்தும் என்வாழ்வில் அது வெளிப்படாதளவுக்குபாவியானேன். என்னை மன்னித்து உம் அன்பை வெளிப்படுத்தி வாழ உதவி செய்யும் நல்லபிதாவே> ஆமென்

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts