‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் (பிப்ரவரி 18) மாலை 6 மணிக்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related posts