மேலும் மோசமாக்கும் என்கிறார் அலிசப்ரி

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறை காணப்படுவதோடு அவை செயற்படுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பு தலையீடானது உண்மையான நல்லிணக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்பதோடு காயங்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனீவா அமர்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார். சகோதர பத்திரிகையான சண்டே ஒப்சேவர் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே உலகிற்கு நாங்கள் இவற்றை காண்பித்து இங்கு மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை அங்கீகரிக்குமாறு கோரவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரச்சினைகளுக்கு உள்நாட்டு பொறிமுறை தான் சரியான தீர்வாகும் அவ்வாறான உள்நாட்டு பொறிமுறைகள் காணப்படுகின்றன.

அவை செயல்படுத்தப்படுகின்றன. சர்வதேச சமூகத்தின் மூன்றாம் தரப்பு தலையிடுவதை விட காயங்களை ஆற்றுவதற்கு இவை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும். மூன்றாம் தரப்பு தலையீடானது உண்மையான நல்லிணக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் காயங்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும். எனவே, எங்களின் நிலைப்பாடு நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது, மேலும் இதில் முன்னேற்றகரமான நிலை ஏற்படும். உண்மை நிலைமையை எடுத்துரைக்க நாம் பின்வாங்க மாட்டோம். வடக்கு, கிழக்கில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணமலாக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன பலப்படுத்தப்பட்டு, நிலையான வளர்ச்சி இலக்குகள் அடையப்படுகின்றன. எனவே, நமது முன்னேற்றத்தை உலகிற்குக் காட்ட விரும்புகிறோம், மேலும் இந்த மாற்றங்களை அங்கீகரிக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். நல்லாட்சி அரசில் அதைச் செய்ய முடியவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பலருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆக மொத்தத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம் என்றார்.

தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொக்குவில் இந்துக் கல்லூரியில் 12 ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தோம். 2018 ஆம் ஆண்டில், இந்தப் பாடசாலையைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் வெள்ளத்தின் போது உதவ தெற்கில் உள்ள காலிக்குச் சென்றனர். எனவே, அவர்களை அங்கீகரித்து வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலங்கள் அமைக்க உதவிகளை வழங்க விரும்புகின்றோம். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு அவர்களுடனான சந்திப்பையும் இந்த அலுவலகம் ஏற்பாடு செய்தது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களுடன் நல்லிணக்கத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நாங்கள் கலந்துரையாடினோம்.

காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி வழங்கி வருகிறோம். குழந்தைகளை இழந்த பல பெற்றோர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்தது, அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதை அறிய விரும்பினேன். எனவே, உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு மக்களுக்கு உதவவும், இனங்களுக்கு இடையில் பாலம் அமைக்கவும் இது ஒரு நல்ல திட்டமாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts