கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட்லக் சகி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்லக் சகி’. கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சுதிர் சந்திர பத்ரி தயாரித்துள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்யப்படவுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, ‘குட்லக் சகி’ டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடவும் படக்குழு பல்வேறு ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts