அடையாளம் தெரியாமல் மாறிய ‘டூயட்’ பட நாயகி

டூயட் பட நாயகி மீனாட்சி சேஷாத்ரி யோகா செய்வது போன்ற தனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

1994-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘டூயட்’. பிரபு, ரமேஷ் அர்விந்த், மீனாட்சி சேஷாத்ரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் மீனாட்சி சேஷாத்ரியின் துள்ளலான நடிப்பும், அவரது கொள்ளை கொள்ளும் அழகும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.தமிழ் தவிர மீனாட்சி சேஷாத்ரி இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். அந்தவகையில் ‘ஹோசியர்’, ‘பேவாபை’, ‘மேரி ஜங்’, ‘சுவாதி’, ‘டாகேட்’, ‘இனாம் தஸ் ஹசார்’, ‘ஷாகென்ஷா’, ‘மஹாதேவ்’, ‘ஜர்ம்’, ‘காயல்’, ‘கர் ஹொ டு ஆசியா’, ‘டாமினி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடன கலைஞரும் கூட. ‘கதக்’ எனும் திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். பின்னர் கணவர்-குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அமெரிக்காவில் ‘செரிஷ் டான்ஸ் ஸ்கூல்’ எனும் பெயரில் நடன பள்ளியை நடத்தி வருகிறார்.

தற்போது மீனாட்சி சேஷாத்ரி யோகா செய்வது போன்ற தனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி அடையாளம் தெரியாமல் போய்விட்டாரே… என்று தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

Related posts