முதலாவது மாடியால் விழுந்தார் பெண்மணி சில்க்போவில் சம்பவம்

டென்மார்க் சில்க்கப்போ என்ற அழகிய நகரில் நடந்த சம்பவம் ஊடகங்களை உலுப்பி எடுத்துள்ளது. முதலாவது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண்மணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிர் ஊசலாடுகிறது. எப்படி விழுந்தார்.. அதுதான் சந்தேகம். இவருடைய வாழ்க்கை துணையாக இருந்தவர் தள்ளிவிட்டிருக்கலாமா..? சந்தேகத்தின் பெயரில் 35 வயது நபர் கைதாகியிருக்கிறார். கீழே விழுந்த பெண்மணியின் வயது 34 என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த நபர் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று நேற்று இரவில் இருந்து காலை ஐந்து மணி வரை விசாரிக்கப்பட்டுள்ளார். அயலில் உள்ள ஒருவர் முக்கிய சாட்சியமளித்துள்ளார். மேலும் சாட்சியங்களை தேடுகிறது போலீஸ். பெண்மணி ஓகூஸ் பல்கலைக்கழக வைத்திய சாலையில் சத்திரசிகிச்சைக்குள்ளாகியிருக்கிறார்.

மதுபானம் விற்கும் பியர் பாரின் மேல் பகுதி கட்டிடத்தில் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்கிறது விசாரணை…

அலைகள் 22.01.2022

Related posts