ஜனாதிபதியின் போக்கு இன்னமும் மாறவில்லை

இனப்பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக பார்க்கும் ஜனாதிபதியின் போக்கு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஜனாதிபதி கோதாபய அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசின் கொள்கையை விளக்கி இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையில், “இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக” பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக காட்டினார்.
ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன்.
அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது

Related posts