குணமடைந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்…!

நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

கொரோனா 3-வது அலை திரையலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 11-ம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குணமடைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அதில் “இந்த நாட்களில் எதிர்மறை என்பது நேர்மறையான விஷயத்தைக் குறிக்கின்றது. உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. பொங்கல் மற்றும் சங்கராந்தியை கொண்டாடிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.

அதனுடன் கீர்த்தி சுரேஷ் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

Related posts