ஓட்டல் அறைக்கு தனியாக வரச் சொன்னார்கள்…!

சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை அப்சரா ராணி பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை அங்கீதா மஹாராணா. ராம் கோபால் வர்மாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கிதா என்ற பெயரை அப்சரா ராணியாக மாற்றிக்கொண்டார். அதில் அவர் கவர்ச்சியாக நடித்து உள்ளார்.அப்சரா ஒடிசாவை சேர்ந்த பெற்றோருக்கு டேராடூனில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பிலும் மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர்.

சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அப்சரா பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் .

என்னை கன்னட சினிமா துறையில் ஒரு படத்துக்கு கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் கதை விவாதம் என்ற பெயரில் ஓட்டல் அறைக்கு தனியாக வரச் சொன்னார்கள். தங்கள் ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு கொடுப்போம் என்று நிபந்தனை விதித்தனர்.

நான் மட்டும் அங்கே தனியாக செல்லாமல் என் அப்பாவை துணைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு சென்ற பிறகு நிலைமை புரிந்து நாங்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டோம்.

இதுவரை தெலுங்கில் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்ததில்லை . தெலுங்கில் திறமை உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் மதிப்பார்கள் என்றும் அப்சரா கூறியுள்ளார்.

Related posts