தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது…!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,978 இல் இருந்து 12,895 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895 ஆக உள்ளது. தமிழகத்தில் 12,843 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேர் என 12,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் மேலும் 12 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,855 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்னிக்கை 51,355 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இருந்து மேலும் 1,808 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,12,096 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 185 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதித்த விவரம்:

செங்கல்பட்டில் 1,332 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,512 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 591 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 702 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் 585 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 608 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 309 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 343 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் 314 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 348 ஆக உயர்ந்துள்ளது.வேலூரில் 243 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 295 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சியில் 237 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 275 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் 226 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 219 ஆக குறைந்துள்ளது.

கிருஷ்ணகிரி – 103, மதுரை – 348, நாகை – 48, நாமக்கல் – 87, நீலகிரி – 23, பெரம்பலூர் – 50, புதுக்கோட்டை – 20, ராமநாதபுரம் – 58 பேருக்கு பாதிப்பு. ராணிப்பேட்டை – 184, சேலம் – 146, சிவகங்கை – 70, தென்காசி – 38, தஞ்சை – 118, தேனி – 58 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts