வைரலாகும் புகைப்படம்: இரு வேடங்களில் நடிக்கும் கார்த்தி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இரு வேடங்களில் நடிப்பதாக படக்குழுவினர் உறுதி செய்தனர். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனான கார்த்தி தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக படக்குழுவினர் உறுதி செய்து, இரு தோற்றங்களையும் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் ஒரு தோற்றத்தில் வயதானவராகவும், இன்னொரு வேடத்தில் இளம் தோற்றத்திலும் இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. சிம்ரன், ராஷிகன்னா, ரஜிஷா விஜயன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. ஏற்கனவே சிறுத்தை படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts