வலிமை படத்தை ரூ.300 கோடிக்கு விலை பேசிய ஓ.டி.டி.

அஜித்தின் வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ரூ.300 கோடிக்கு விலை பேசப்பட்டதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வர இருந்த பல புதிய படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13-ந் தேதி வெளியாக இருந்த அஜித்குமாரின் வலிமை படத்தையும் ஒத்தி வைத்துள்ளனர்.

இதுபோல் மேலும் சில தமிழ் படங்களின் ரிலீசும் தள்ளிப்போகிறது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருந்த ஆர் ஆர் ஆர், பிரபாஸ் நடித்துள்ள ராதேஷியாம் ஆகிய படங்களும் ரிலீசை தள்ளி வைத்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்த களம் இறங்கி உள்ள ஓ.டி.டி. தளங்கள் தியேட்டருக்காக காத்திருக்கும் புதிய படங்களை வாங்கி ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்களிடம் போட்டிப்போட்டு விலை பேசி வருகின்றன. அஜித்தின் வலிமை படத்துக்கும் ரூ.300 கோடி தருவதாக விலை பேசியதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் வலிமை படக்குழுவினர் தியேட்டரில்தான் படத்தை வெளியிடுவோம் ஓ.டி.டி. தளத்துக்கு தரமாட்டோம் என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா 3-வது அலை அடங்கிய பிறகு ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.

Related posts