கடைசி நொடிகள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘கடைசி நொடிகள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘பாரன்சிக்’. இந்த திரைப்படத்தில் டொவினோ தாமஸ் மற்றும் மம்தா மோகன்தாஸ் முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமான ‘பாரன்சிக்’ தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கடைசி நொடிகள்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை நவிஸ் சேவியர் மற்றும் சிஜு மேத்யூ ஆகியோர் இணைந்து ஜூவிஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றத்தை விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில் கடைசி நொடிகள் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் உரிமையை கீதா ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது.

மேலும் இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தி ரீமேக்கில் விக்ராந்த் மாஸ்ஸி, ராதிகா ஆப்தே, பிராச்சி தேசாய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts