பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிப்பு

தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஜனவரி 05 முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 14 இலிருந்து ரூ. 17 ஆக ரூ. 3 இனால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பஸ் தொழில் துறையை கவனத்தில் கொண்டும் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டும் முடியுமான அளவில் மிகக்குறைந்த கட்டணங்களின் அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
அனைத்து பஸ் வழிப்பாதைகளிலும் மாறுபட்ட அளவில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பஸ் கட்டண சூத்திரத்தை விட குறைந்த அளவிலான அதிகரிப்பையே மேற்கொண்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு சூத்திரத்திற்கு அமைய கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமாயின் கட்டணங்களை 20 – 25% வரை அதிகரிக்க நேரிடும் நிலை காணப்படுகின்ற போதிலும் அதனை 16.5 – 17 வீதத்திற்கு மட்டுப்படுத்தும் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பஸ் சங்கங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts