இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார் பசில் ராஜபக்‌ஷ

புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், சிரேஷ்ட அமைச்சர்களையும், பசில் ராஜபக்‌ஷ சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் (30) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள் மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கொழும்பின் அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts