தல’ என்று என்னை அழைக்க வேண்டாம் : நடிகர் அஜித்

‘தல’ என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் ,தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

Related posts