மஹிந்த சமரசிங்கவின் இடத்திற்கு மஞ்சு லலித் வர்ணகுமார

களுத்துறை மாவட்ட SLPP எம்.பி. மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது எம்.பி. பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளித்திருந்தார்.

எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள அவர், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts